Skip to main content

செந்தில்பாலாஜியை தோற்கடிப்பது எப்படி? திட்டம் போடும் 10 அமைச்சர்கள்!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

 

 
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை எப்படியும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதற்காக  தொகுதிக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செந்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் பணியாற்ற திட்டமிட்டுள்ளார்கள்.

 

s

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி என்பதால், அமைச்சர்கள் மற்றும்  நிர்வாகிகளுக்கு வெற்றி பெற வைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இன்னும் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள். 

 

செந்தில்பாலாஜியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார். இத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி, செந்தில்பாலாஜியை பழி தீர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக நேரடியாக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறார். 

 

குறிப்பாக தொகுதியில் கனிசமான அளவு ஓட்டு வங்கி உள்ள வேட்டுவ கவுண்டர் மற்றும் முஸ்லீம் இன மக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அமமுகவில் இருந்து செந்தில்பாலாஜி திமுக சென்றபின் அவருக்கு எதிரான மனநிலையில் உள்ள அமமுக முக்கிய பிரமுகர்களையும் தன் பக்கம் இழுக்கும் வேலையிலும் இறங்கி இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 

இந்த நிலையில் செந்தில்பாலாஜி செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய அதே மண்டபத்தில் அ.தி.முக. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கு இடையே நடக்கும் யுத்தம். அதிமுகவிற்கு சோதனை வந்த போது காட்டிக்கொடுத்தவர் செந்தில்பாலாஜி. இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தல் என்று ரொம்ப காட்டமாக பேசினார். 

 

செந்தில்பாலாஜயை தோற்கடிக்க திட்டம் போடும் 10 தமிழக அமைச்சர்களும் கடந்த முறை செந்தில்பாலாஜி பணத்தை தண்ணீராக இறைத்தற்காகத் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த முறையும் கட்டாயம் பணத்தை தண்ணீராக இறைப்பார். அதை நாம் கூர்ந்து கவனித்து கையும் களவுமாக பிடித்துக்கொடுத்தால் தேர்தலை நிறுத்திவிடலாம்  என்று களத்தில் நேரடியாக சந்தித்து வெற்றி பெற முடியாது என்கிற சூழ்நிலையில் இந்த மாதிரியான திட்டத்தையும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.   ஆனால் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியோ இதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ் ஜோதிமணி, கே.சி.பி, நன்னீயூர் ராஜேந்திரன், ஆகியோரும் கவலைப்படாமல் பிரச்சாரம் செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்பதில் முழு மூச்சாக இருக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனி அவகாசம் இல்லை, இன்றே கடைசி நாள்'' - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி! 

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

 'No more opportunity; today is the last day' '- Interview with Minister Senthilpalaji!

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேற்றுமுதல் (14.06.2021) கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்கவும்  உத்தரவு வெளியாகியிருந்தது.

 

ஊரடங்கு முடியும்வரை மின்வெட்டு இருக்காது என ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சாரத்துறை சார்பில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ''மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. 50 சதவீதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது. மே 10ஆம் தேதிமுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தைக் கட்ட இன்று கடைசி நாள்'' என்றார்.