கீரமங்கலம் வேம்பங்குடியில் சிவந்தி ஆதித்தனார் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வேம்பங்குடி கைப்பந்து கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கைப்பந்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டனர்.
தினத்தந்தி அதிபர் சிவந்;தி ஆதித்தனார் நினைவாக மாணவர்களுக்காண கோடை கால கைப்பந்து பயிற்சி முகாமை வேம்பங்குடி கலைவாணர் திடலில் நடத்த திட்டமிட்டு அதற்காண தொடக்கவிழா ஆர்எம்.நேத்திரா முத்து, தலைமையில் முன்னால் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஜவகர்பாபு, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஜ் கட்சி தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் வரவேற்றார்.
இந்த கோடை கால பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 60 மாணவர்கள் பயிற்சிக்காக கலந்து கொள்கிறார்கள். இதில் 10 மாணவிகளும் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து மாலையில் தொடங்கி இரவு 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இவர்களுக்கு மதுரை என்.ஐ.எஸ். கோச்சர்கள் குருபிரசாத், பழனியப்பன், கணேசன், சென்னை பிசிக்கல் டைரக்டர் வெங்கடேசன் ஆகியோர் பயிற்சி கொடுக்கின்றனர். மேலும் சிறப்பு தமிழ்நாடு காவல் துறை கைபந்து பயிற்சியாளர் பழனியாண்டி பயிற்சி கொடுக்கிறார். முகாம் ஏற்பாடுகளை கீரமங்கலம் வேம்பங்குடி கைப்பந்து கழக நிர்வாகிகள், சிவகுருநாதன், அருள், சரவணன் மற்றும் கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் போது.. கீரமங்கலம், வேம்பங்குடி பகுதி கைப்பந்தில் மாநில அளவில் பல வீரர்களை உறுவாக்கி உள்ளது. சிவந்தி ஆதித்தனார் தொடர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல விளையாட்டு வீரர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார். அதனால் தான் அவரது நினைவாக இந்த கோடைகால பயிற்சி முகாமை நடத்துகிறோம். இந்த ஆண்டும் தொடங்கும் இந்த பயிற்சி முகாம் ஒவ்வொரு கோடை விடுமுறையில் நடத்தப்படும். இந்த பயிற்சி மூலம் மாவட்ட அளவில் உள்ள சிறந்த விளையாட்டு மாணவர்களை கண்டறிந்து வெளி உலகிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்றனர்.