ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி இன்று(19 தேதி) காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டார். அந்த மின்னணு இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் எட்டு பேர் ஈடுபட்டுள்ளார்கள் இன்றைக்குள் இந்த பணிகள் நிறைவடையும். தேர்தல் நடத்தை விதிகள் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அமல் செய்யப்பட்டு அதற்கான கண்காணிப்புகள் நடைபெற்று வருகிறது மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இந்த தொகுதியை இடைத்தேர்தலுக்கான வேலையில் தொடர்ந்து நடக்கும்” என்றார்.