திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்புவிழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜி.சரத்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் வி.எம்.வேலுமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். ஆத்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி.எம்.வேலுமணி துவக்கிவைத்தார்.
சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் குத்துவிளக்கு ஏற்றி நீதிமன்ற பணிகளை துவக்கிவைத்தார். முன்னதாக திறப்பு விழாவிற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் வி.எம்.வேலுமணி அவர்களுக்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.கே.ஜமுனா, திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கோட்டாட்சியர் உஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சக்திவேல், ஆத்தூர் தாசில்தார் பிரபா ஆகியோர் நீதியரசர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
ஆத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்புவிழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.காமாட்சி, துணை அமைப்பாளர்கள் வி.மூர்த்தி, சூசைஆல்பர்ட், சண்முகசுந்தரம், புரவலர் சுரேஷ்குமார் மற்றும் நகர அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் தண்டபாணி, மார்க்கிரேட்மேரி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.மனோகரன், செயலாளர் வி.கிருஷ்ணன், ஆத்தூர் ஊராட்சி செயலாளர் மணவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.