
சென்னையில் ஆண் நண்பருடன் தனிமையிலிருந்த தாய், இடையூறாக இருந்த இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த சம்பவத்தில் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான தமிழரசி. இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கபிலன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன் கபிலன் கருத்துவேறுபாடு காரணமாக தமிழரசியை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபருடன் தமிழரசி நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி வீட்டிற்கு வந்த சிவாவுடன் தமிழரசி தனிமையிலிருந்தபொழுது இரண்டரை வயது பெண் குழந்தை இடையூறு செய்ததால் இரக்க குணமின்றி தாய் தமிழரசி ஆத்திரத்தில் குழந்தையின் கையை உடைத்துள்ளார். பின்னர் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்குப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், குழந்தைகள் நல ஆணையத்தை நாடிய நிலையில், காசிமேடு சைல்ட் வெல்பர் கமிட்டி உறுப்பினர் காருண்யா தேவி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொடூர தாய் தமிழரசியை தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.