Skip to main content

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு

Published on 12/10/2024 | Edited on 12/10/2024
Discovery of Kallacharayam  on Kalvarayan hill

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களிலும் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்ட பொழுது ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். மண்டகப்பாடி ஓடை அருகே போலீசார் ஆய்வில் ஈடுபட்ட பொழுது சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் பேரலில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக இருந்த கும்பல் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்