மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரசு விரைவு பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதிவிட்டு தாறுமாறாக சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தினர். அப்போது பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் மது போதையில் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் இருவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் மது போதையில் இருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.