Skip to main content

’தமிழர்கள் கல்வி கற்று உலகளவில் பரவ காமராஜரே காரணம்’ -தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019


 

சிதம்பரத்தில் சிதம்பரம் காமராஜர் பேரவையின் ஐம்பதாவது ஆண்டு பொன் விழா, காமராஜரின்117-ஆவது பிறந்த தின முப்பெரும் விழா நடைபெற்றது. காமராஜர் பேரவைத் தலைவர் இலக்குமணன், செயலர் ஜீவா விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில்,

அரை நூற்றாண்டாக விழா நடத்தி வரும் காமராஜர் பேரவைக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் தினமும் ஏதாவதொரு மூலையில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதென்றால், அது காமராஜர் பெயர்தான்.

 

d

 

இது அவரது அரசியல் தூய்மைக்கும் நேர்மைக்கும் அடையாளம். தனது ஆட்சிக் காலத்தில் காமராஜர் செய்த அளப்பரிய சாதனைகள் வெளியில் தெரியாமல் போனதற்கு, அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் அதுகுறித்து விளம்பரப்படுத்தத் தெரியாததே காரணம். தமிழர்கள் சிறந்த கல்வி கற்று உலகம் முழுவதும் பரவக் காரணமானவர் காமராஜர் மட்டுமே. பேசப்படாவிட்டாலும் அவர் பத்து ஆண்டுகள் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளை யாரும் மறுத்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. எனவே மாணவர்கள் காமராஜரை நன்கு படிக்கவேண்டும் என்றார். 

 

இதனைதொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

 

முன்னதாக, ராணி சீதை ஆச்சி மேல் நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்  விநாயகம் வரவேற்றார். வழக்குரைஞர் சம்பந்தம், மூத்த பத்திரிகையாளர் தணிகைதம்பி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ராஜ்பிரவீன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் மாணவ மாணவிகள் என திரளாக கலந்துகொண்டனர்.

 

அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு சிதம்பரம் காமராஜர் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

 
 

சார்ந்த செய்திகள்