Skip to main content

தர்மபுரி டூ பெரம்பலூர்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த அதிகாரிகள்

Published on 25/07/2024 | Edited on 25/07/2024

 

பெரம்பலூரில் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் கும்பல் ஒன்று கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கமாக தர்மபுரியில் இதுபோன்ற கும்பல்கள் அதிகமாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தர்மபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்ற கும்பலை மருத்துவத்துறை அதிகாரிகள் சினமா பாணியில் விரட்டி பிடித்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் கும்பல் குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில் இது குறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட இணை சுகாதாரத்துறை இயக்குனர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தர்மபுரியில் இருந்து இந்தக் கும்பலை விரட்டி வந்துள்ளனர்.

அந்தக் கும்பல் சேலம் வழியாக காரில் கர்ப்பிணி பெண்களை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் வந்த நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் இருந்து  இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செங்காபுரம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பாலினத்தை அறிவதற்கு அந்தக் கும்பல் ஆயத்தமாகிய நிலையில் அவர்கள் வைத்திருந்த கருவிகளுடன் பிடிபட்டுள்ளனர். ஸ்கேன் செய்வதற்கான சிறிய கருவிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்