Published on 22/05/2022 | Edited on 22/05/2022

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இன்று (22/05/2022) பட்டணப் பிரவேசம் நடைபெற உள்ள நிலையில், ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தருமபுரம் ஆதீனம் கூறுகையில், "இது ஒரு ஆன்மீக விழா. இதிலே எந்த அரசியலும் நுழையாத அளவிற்கு நம் ஆதீனம் தொடர்ந்து அந்த பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், தான் விழாவும் அப்படி அமைந்திருக்கிறது. இந்த விழாவிலே பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் வருவதற்கும், தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.