குடமுழுக்கு, தைப்பூசம் எனத் தொடர்ந்து விழாக் கோலத்திலிருந்த பழனியில் பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணப்பட்டதில் ஏழு கோடி ரூபாய் காணிக்கை சேர்ந்துள்ளது.
அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அதேபோல் தைப்பூச திருவிழாவும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பணம், தங்க நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்தினர்.
இதனால் கோவில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அவை கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து என்னும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. 7.17 கோடி ரூபாய் பணமும் 1,248 கிராம் தங்கம், 48,277 கிராம் வெள்ளி, 2,529 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியில் பழனி முருகன் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டு காணிக்கைகளை கணக்கிட்டு முடித்துள்ளனர்.