








Published on 22/09/2023 | Edited on 22/09/2023
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அருகில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து வீடு வீடாக டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் சென்னை மாநகர மேயர் பிரியா, சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.