தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகளைக் கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை நியமித்து சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட உத்தரவில், “கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு வடிவேலன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர், பூந்தமல்லி, தென்காசி மற்றும் சிவகாசி மாவட்டங்களுக்கு கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.