டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி
சென்னை ஆவடியில் மர்ம காய்சலுக்கு 15 வயது சிறுவன் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காமராஜர் நகரைச் சேர்ந்த சிறுவன் ரூபேஷ் கடந்த வாரம் முதல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ரூபேஷூக்கு இருந்துள்ளது எனவும், டெங்கு காய்ச்சலால் தான் சிறுவன் உயிரிழந்துள்ளான் என அப்பகுதி வார்டு கவுன்சிலர் மேகலா குற்றம்சாட்டினார்.