இந்தியாவின் மத்திய பாஜக மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருகிறது என்று அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி வருகிற ஜனவரி எட்டாம் தேதி பாரத் பந்த் அறிவித்துள்ளனர்.
இதற்கு இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியின் தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அரசுப் பணியில் உள்ள பணியாளர்களும் ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்கள் வரை மோடி அரசை கண்டித்து நடக்கும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த பாரத் பந்தைை மக்களிடம் விளக்கி செல்வதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மூலம் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
அதன்படி இன்று(5/1/2020) ஈரோடு மற்றும் நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனவரிி 8 இல் நடக்கும் பாரத் பந்த் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கூறுகிறார்கள்.