Skip to main content

 பணமா, காசோலையா?- காக்கிகளைக்கொண்டு நில உரிமையாளர்களை அச்சுறுத்தும்  கெயில் நிறுவனம்

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

கெயில் நிறுவனம் குழாய் பதிக்கப்பட உள்ள விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினரின் மிரட்டலோடு பணம் மற்றும் காசோலை வழங்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகிவருகிறது.

 

e

 டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாநில அரசு வாய்மூடி மெளனியாக இருந்து மறைமுகமாக ஆதரவளித்துவருகிறது. அபாயகரமான இந்த திட்டத்தை எதிர்த்தும்,  திட்டத்தை கைவிடக் கோரியும் விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஒருங்கினைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

 பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் ஜூன் 12 ம் தேதி மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை கடல் கரையோரம் 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது தவிர பல்வேறு விவசாய மற்றும் பொதுநல அமைப்புகளும் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

 

இந்தநிலையில் மாதானம் முதல் மே மாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளை கெயில் என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. பல இடங்களில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை மே மாத்தூரில் இருந்து நரிமனத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்துவருகிறது.

 

t

 

இதனை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து போலீசார் கெடுபிடியுடன் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு ஆயத்தமடைகின்றனர். ஒருசில விவசாயிகள் இதற்கு உடன்பட மறுத்து நீதிமன்றம் செல்ல உள்ளனர். கெயில் நிறுவனமோ இதோடு நிற்காமல் அடுத்தகட்ட சாகுபடிக்கான தொகையையும், காசோலையாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கொடுத்து மடைமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர், இதற்கு இனங்காத விவசாயிகளின் மீது பொய்வழக்கு போட்டு அச்சுறுத்துவது என காவல்துறையின் மூலம் வேலைகள் நடந்துவருகிறது.


 
மீண்டும் பதற்றம் அதிகமாகியுள்ளது, ஒருபுறம் எட்டுவழிச்சாலை பிரச்சினை, மற்றொருபுறம் நான்குவழி சாலைக்கான பிரச்சினை, நடுவில் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, இப்படி நாளாபுறம் தமிழக மக்களை மத்திய அரசு நசுக்கிவரும் நிலையில் தமிழக அரசோ கோமா நிலையில் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.
 

சார்ந்த செய்திகள்