Skip to main content

டெல்டா விவசாயிகளை விவசாயத்தை துறந்து போராட்டக் களத்திற்கு இழுக்கும் ஒஎன்ஜிசி

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

தமிழக ஆற்றுப்படுகை மற்றும் கடலோர பகுதிகளில் கனிம வளங்களான இயற்கை எரிவாயு, நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் அதிகம் கிடைப்பதாக கண்டறிந்த ஒஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களிலும் சோதனைகளை செய்து மத்திய அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையின் அிப்படையில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்குவும் ஹைட்ரோ கார்பன் எடுக்கவும் கடந்த ஆண்டுகளில் ஒப்பந்தம் விடப்பட்டு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் புரிந்துணர்வு கையெழுத்திட்டனர். 

 

protest

 

இந்த நிலையில் ஜெ முதல்வராக இருந்த போது இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் கிராமம் கிராமமாக சென்று மீத்தேன் எதி்ப்பு பிரசாரங்களை செய்தார். அதன் பிறகே விவசாயிகள் விழிப்புணர்வு பெற்ற நிலையில் விவசாயிகளை ஒருங்கிணைத்து பல போராட்டங்களை நடத்தினார். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் களத்திலேயே நம்மாழ்வார் உயிர் பிரிந்தது. அதன் பிறகு மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று ஜெ அறிவித்தார். 

 

சில ஆண்டுகள் அமைதியாக இருந்த நிலையில் ஜெ மறைவுக்கு பிறகு திட்த்தின் பெயரை மாற்றி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்று அறிவித்து ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் நெடுவாசல் கிராமத்தில் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக ஜெம் நிறுவனம் கையெழுத்திட்டது. மீத்தேன் திட்ட பிரச்சாரங்களுக்கு பிறகு  விழிப்புணர்வடைந்திருந்த நெடுவாசல் மக்கள் தொடர் போராட்டங்களை 196 நாட்கள் நடத்தினார்கள். இந்த விவசாயிகள் கிராம மக்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள், தன்னார்வளர்கள், திரைத்துறையினர் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று போரா்டத்தில் பங்கெடுத்தனர். இதனால் ஜெம் நிறுவனம் ஒப்பந்த இடத்தை மாற்றிக் கொடு என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று அறிவித்தது. ஆனால் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய மறுத்துவிட்டது. சில மாதங்கள் அமைதியாக இருந்த மத்திய அரசு மீண்டும் தமிழகத்தை குறிவைத்து கிளம்பியுள்ளனர்.

 

protest

 

தற்போது ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் 2 வட்டங்களையும் ஒஎன்ஜிசி ஒரு வட்டத்தையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தகவல் அறிந்து விவசாயிகள் கொதிப்படைந்துள்ள நிலையில் தஞ்சை நகரில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நகர் முழுவதும் விளம்பர  பதாகைகளை வைத்துள்ளது.. ஒஎன்ஜிசி நிறுவனம் விவசாயிகளுக்கான உரம் தயாரிக்க உதவுகிறது, மரபுசாரா எரிசக்தி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது என்ற பல திட்டங்களை வெளிக் காட்டும் நூறுக்கும் மேற்பட்ட பதாகைகளை வைத்துள்ளது. இந்த பதாகைகளை பார்த்து நகர மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் கொதிப்படைந்துள்ளனர்.

 

இது குறித்து டெல்டா விவசாயகள் கூறும் போது.. டெல்டா பகுதியில் விவசாத்தை அழித்து விவசாயிகளை அவதிப்பட வைத்து விளை நிலத்தில்  இயற்கை எரிவாயு எடுக்கும் சூழ்ச்சியால் தான் காவிரியில் தண்ணீர் உடைபபெடுத்து போகும் போது கூட கடைமடைகளுக்கு தண்ணீரை விடாமல் கடலுக்கு அனுப்பியுள்ளனர்.  அதனால் சில நாள் வந்த தண்ணீரை நம்பி நாற்றுவிட்ட விவசாயகளும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தி் உள்ள நெல் பயிர்களும் கருகி நாசமாகிவிட்டது. அதாவது மத்திய அரசு டெல்டாவில் செய்ற்கையாக ஒரு வறட்சியை ஏற்படுத்தி விளை நிலங்களை பிடுங்க நினைக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது. அதனால் தான் ஒஎன்ஜிசி பதாகைகள் வைக்க அனுமதியும் கொடுத்துள்ளது.

 

 

கொஞ்ச தண்ணீர வைத்து விவசாயம் செய்ய நனைத்த விவசாயிகளை திசை திருப்பிவிட்டு திட்டத்தை செயல்படுத்த துணிந்துவிட்டது. விவசாயிகள் சாகுபடிக்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் போது 3 வட்டங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டதுடன் தஞ்சை நகர் முழுவது வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மூலம் விவசாய பணிகளை துறந்து விவசாயகள் போராட்டக் களத்திற்கு அழைக்கிறது ஒஎன்ஜிசி நிறுவனம். ஆனால் உயிரே போனாலும் மண்ணைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறா்கள் விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்