மத்திய அரசை கண்டித்து ஒரு மாத வேலை நிறுத்தம் பேராட்டம் நோட்டீசை துப்பாக்கி தொழிற்சாலை HAPP தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அரசின் பாதுகாப்புத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சென்னை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 6 இடங்களில் உள்பட இந்தியாவின் 41 படைக்கல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நாட்டின் ராணுவத்திற்கும் சிறப்பு பிரிவின் பாதுகாப்பு பிரிவு போலீசுக்கு நவீன ரக துப்பாக்கிகள் தளவாடப் பொருட்கள் ஆண்டுக்கு ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.
இவற்றை மத்திய அரசு நேரடியாக நிர்வகிப்பது தவிர்த்து தனியார்மயமாக்குவதற்கான வேலையில் இறங்கி உள்ளது. இதனால் மறைமுக ஊழியர்கள் 1 லட்சம் பேர் உள்ளிட்ட இரண்டு இலட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மத்திய அரசின் தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து முயற்சியை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை ஒரு மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நாவல்பட்டில் HAPP தொழிற்சாலைகளில் எம்பிளாய்மெண்ட் யூனியன், அம்பேத்கார் யூனியன், பாரதிய மஸ்தூர் சங்கம் ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டக்குழு சார்பில் வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்யை அந்தந்த நிர்வாகங்களிடம் கொடுத்து அதிர்ச்சியை கொடுத்தனர்.
எம்பிளாய்மெண்ட் யூனியன் இரணியன் சத்திய வாசகன் தலைமையிலும், பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ரகுமான் அலெக்சாண்டர் தலைமையிலும், ஐஎன்டியுசி சார்பில் பிரபாகரன் அவர்கள் தலைமையிலும் தனித்தனியே பொது மேலாளர் ராகவேந்திரா சோப்ராவிடம் வேலை நிறுத்த போராட்டத்திற்கான நோட்டிஸ்யை வழங்கினர்.
துப்பாக்கி தொழிற்சாலை ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் பொதுமேலாளர் சிரீஸ்கேராவிடம் போராட்டத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. துப்பாக்கி தொழிற்சாலையில் போராட்டக்குழு சார்பில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஒரு மாதம் போராட்டம் காரணமாக தொழிற்சங்கங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மீண்டும் வேலைகேட்டு போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி நிர்வாகிகள் உட்பட 65 பேர் மீது போராட்டத்தை தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ள சம்பவம் நடந்தது.
திருச்சி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக 150 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் ஏற்கனவே வேலைப் பார்த்த தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் புதிதாக ஆட்களை தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணி கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துப்பாக்கி தொழிற்சாலையில் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பணிக்கு சென்ற பொழுது பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த 9 பெண்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் நவல்பட்டு போலீசார் இப்பிரச்சனை சம்பந்தமாக வேலை இழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 34 பேர் மீதும் மற்றொரு காண்ட்ராக்ட் நிறுவன தொழிலாளர்கள் 20 பேர் மீதும் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மீதும் போராட தூண்டியதாக நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் நவல்பட்டு போலீசாரின் இந்த செயல் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தொழிற்சாலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்களே 1 மாத வேலைநிறுத்த போராட்டத்திற்கு இறங்கிய இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.