Skip to main content

மான் கறி விற்றவர் கைது! 

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Deer meat seller arrested

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அவ்வப்போது திருட்டுத்தனமாக மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வன அலுவலர் திருமலை, பாலசுந்தரம், வனக்காப்பாளர் பிரபு, கஜேந்திரன் உள்ளிட்டோர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். 

 

நேற்று அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பூத்துறை சாலை வழியாக ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அவர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரில் குடியிருக்கும் முருகன்  என்பதும், இவர் திருவண்ணாமலையில் இருந்து வேட்டையாடப்பட்ட மான் கறியை வரவழைத்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. 

 

இதையடுத்து முருகன் வைத்திருந்த மான் கறியைப் பறிமுதல் செய்து முருகனையும் கைது செய்து திண்டிவனம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனச்சரக அலுவலர்கள் செல்வி, அஸ்வினி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். முருகனுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 


சார்ந்த செய்திகள்