Skip to main content

மதுரையில் தீபா அணி கலைப்பு!

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
மதுரையில் தீபா அணி கலைப்பு!



மதுரையில் ஜெயலிலிதா மறைந்த பின்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று ஆரம்பிக்கப்பட்டு, தற்போது அஇஅதிமுக தீபா அணி என்று நடத்தி வருகிறார்கள். நேற்று மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் பி.எம்.கார்த்திகேயன், பி.பிரதிப் தலைமையில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என மாநகரில் தீபா கூடாரம் காலி ஆகிவிட்டது.

இந்த கட்சி தீபாவால் இயக்கப்படவில்லை தீபா கார் டிரைவர் பான்பராக் ராஜா தான் இயக்குகிறார். இவரிடம் ஆளுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து தான் இந்த புறநகர், மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை நாங்கள் வாங்கினோம். எங்களுக்கு கீழ் இருக்கும் பகுதி, ஒன்றியம், வட்டம் என பதவிக்கு ஏற்றாற் போல் பணம் எங்களிடம் பறிக்கிறார்.

இதை தீபாவிடம் கூறியும் ராஜா சொல்வதை கேள் என்று எங்களை வெளியே தள்ளுகிறார்கள். அதனால் தான் நாங்களும் எங்களுடன் இருக்கும் மற்ற மாவட்ட செயலாளர்கள் 35 பேரும் ராஜினாமா செய்து வெளியே வந்து விட்டோம். பணம் கொடுத்து பதவி வாங்க அவசியம் இல்லை என்று மதுரை மாநகர், புறநகர் இரு மாவட்ட செயலாளர்களும் கூறுகின்றனர்.

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்