Skip to main content

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு; சார்பதிவாளர் பணியிடைநீக்கம்

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Deeding by forged documents; Dismissal of the registrar!

 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்தவர் மாரியப்பன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

இவர், ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் திடீரென்று மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தர்மபுரியில் மாரியப்பன் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இந்நிலையில், அவர் மீது எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற காரணம் தெரியாததால், தர்மபுரி மாவட்ட பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில், மாரண்டஹள்ளியில் சார்பதிவாளராக பணியாற்றியபோது, போலி ஆவணங்கள் மூலம் பல சொத்துகள் பதிவு செய்யப்படுவதற்கு மாரியப்பன் உடந்தையாக இருந்தார் என்பதால், அவரை பணியிடைநீக்கம் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்