ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66.37 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 786 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.41 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 7.18 அடியாக, வறட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.77 அடியாக உள்ளது.