
தேனி குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதிக்கு கடந்த 11-ந் தேதி டிரெக்கிங் சென்ற 36 பேர் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 9 பேர் என மொத்தம் 18 பேர் நேற்று வரை உயிரிழந்தனர்.
இந்நிலையில், 60 சதவீத தீ காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைதொடர்ந்து, சென்னையை சேர்ந்த நிவ்யா நிக்ருதி என்பவரும் உயிரிழந்தார். இதன் மூலம், காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.