வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், அச்சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் தலித் அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து ஆளுனர் மாளிகை வரையிலும் பேரணியாக சென்றனர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். இதில், அனைத்து தலித் அமைப்புகள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக பங்கற்றனர்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச்செயளாலர் ஆளூர் ஷாநவாஸ் கூறியது, இந்த சட்டம் என்பது தவறாக பயன்படுத்தபடுகின்றது என்ற காரணத்தை சொல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்தை நீத்து செல்லக்கூடிய வேலைசெய்திருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான எந்தவிதமான ஆதராமும் இல்லை. உரியவகையில் வன்கொடுமை செய்பவர்களின் மேல் வழக்கு பதிவுசெய்து இந்த சட்டத்தின் மூலமாக எந்தவிதமான நடவடிக்கையும் இன்னும் இல்லை என்பதே இங்குள்ள தலித் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இன்னும் 1 சதவீதம் கூட இந்த சட்டத்தை இந்த அரசு எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் மக்களின் கோரிக்கையாகவும், உண்மையாக இருக்கிறது.
இந்த சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று இந்த சட்டத்தையே காலிசெய்கின்ற வகையில் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.
இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் எந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை சிபிஐயில், வருமான வரி, பெண்களுக்கு எதிரான சட்டத்தில், வரதட்சனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லையா? இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் அந்த சட்டத்தையெல்லாம் எடுத்துவிட்டார்களா? என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றால், யாரால் பயன்படுத்தப்படுகிறது?
தலித் என்பவர்கள் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்களா? அல்லது புகார் கொடுக்கின்ற இடத்தில் இருக்கிறாரா? ஒரு தலித் புகார் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். ஒரு புகாரை கொடுத்தால் அது பொய்யான புகாரா? சரியான புகாரா? எந்த காவல்துறையிடம் அல்லவா இருக்கிறது. அப்படி தவறாக பயன்டுத்தப்படுகிறது என்றால் காவல்துறையால் அல்லவா தவறாக பயன்படு்த்தப்படுகிறது.
அப்படியானால் யாரை நோக்கி இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்?. அதற்காக இந்த சட்டத்தையே காலி செய்வது என்பது மோசமான விலைவை ஏற்படுத்தும். நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறது பா.ம.க மட்டும் தான் இந்த சட்டத்திற்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறது. இவர்களை தவிர நாடுமுழுவதும் அனைத்துக் கட்சிகளும் இதற்கு எதிரான போராட்டத்தில் எழுந்துள்ளது. மோடி அரசுக்கு எச்சிரிக்கை விடுக்கும் வகையில் இதனை ஒன்பதாவது அட்டவனையில் சேர்த்து உறுதிப்படுத்த வேண்டும்.
எப்படி தமிழகத்தில் 50 விழுக்காடு மேல் இடஒதுக்கீடு செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிய போது 69 விழுக்காட்டை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சட்டமாக்கிவைத்து பாதுகாத்து வைத்திருக்கிறோமோ! அந்த வகையில் இந்த சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இன்றைக்கு சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றோம், ஆளுநரிடம் மனுகொடுத்திருக்கிறோம்.
தலித்துகலுக்கான வன்கொடுமைகள் வெட்ட வெளிச்சமாக நடந்துக்கொண்டிருக்கும் வகையில் இந்த சட்டத்திற்கான தேவைதான் அதிகமாக இருக்கிறது. தலித்துக்கள் என்றால் இன்னும் செத்த பிணத்தைக்கூட பொது தெருவி்ல் எடுத்துச்செல்ல முடியவில்லை இந்த நிலையில், இந்த வன்கொடுமையை ஒழிக்கமுடியாத இவர்கள் அதனை ஒழிக்க உள்ள சட்டத்தை ஒழிப்பது என்பது மிக மோசமானது என்றார்.