Skip to main content

சிதிலமடையும் தரங்கம்பாடி சுற்றுலா தளம்!!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

அகில இந்திய அளவில் சிறந்த சுற்றுலா தலமாக சான்றிதழும் பரிசும் பெற்றுள்ள தரங்கம்பாடி கடற்கரை தற்பொழுது சீரழிந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அங்கு சென்றுவந்த பொதுமக்கள்.
 

tharangambadi issue


நாகை மாவட்டம் பொறையாருக்கு அருகே உள்ள கடற்கரையை ஒட்டிய அழகிய கிராமம் தரங்கம்பாடி. அங்கு தான் டேனிஷ்காரர்களின் கோட்டையும் கம்பீரமாக நின்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது. சுனாமி பேரலையாலும், கடற்சீற்றத்தாலும் சிதிலமடைந்து கிடந்த கோட்டையை சமீபத்தில் புனரமைப்பு செய்தனர். அதே நேரத்தில் கடந்த திமுக ஆட்சியில் கடற்கரைப்பகுதியில் அழகிய நடைபாதையும் பாரம்பரியமிக்க விளக்குகளும், சுற்றுலாப்பயணிகள் அமர்ந்து கடற்கரையை ரசித்து மகிழ, இருக்கைகளும் போடப்பட்டன. நடைபாதைகளின் இருபுறமும் கவர்ச்சிகரமான மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டன.

அவை அப்போது அழகாக காட்சியளித்தன. சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் குப்பைகளை போடுவதற்கு ஓரமாக குப்பைத் தொட்டிகளை அமைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது அனைத்தும் பழுதாகி கிடக்கிறது. 16 மின் விளக்குகள் மட்டுமே இருக்கிறது, பாதிக்கு மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்தே கிடக்கிறது, அதேபோல் ஒரு குப்பைத்தொட்டிக்கூட பயன்பாட்டில் இல்லை. தற்போது கடற்கரை மொத்தத்தில் சீர்கெட்டு குடிகாரர்களின் கூடாரமாகவும் இருப்பதுதான் அவர்கள் சலித்துக்கொள்வதற்கு காரணம்.


இதுகுறித்து தரங்கம்பாடி சேர்ந்த சமூக ஆர்வலரான தட்டச்சிணாமூர்த்தியிடம் கேட்டோம்,"தரங்கம்பாடி சீர்கெட்டுப்போக மூதற்காரனம் காரணம் தனி அலுவலர் கிடையாது. பூம்புகார் அலுவலரே தரங்கம்பாடியையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அகில இந்திய அளவில் சிறந்த சுற்றுலாத் தளமாக சான்றிதழும் இதற்கு கிடைத்தது, தற்போது இருக்கும் தரங்கம்பாடி கோட்டையின் நிலமையைக்கண்டால் மிகுந்த கவலை அளிக்கிறது. பயணிகள் அதிக அளவில் வந்து போகிறார்கள், அவர்கள் பார்வைக்கு தரங்கம்பாடி பரிதாபமாகவே தெரிகிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும்." என்கிறார் 

 

சார்ந்த செய்திகள்