Published on 15/10/2018 | Edited on 15/10/2018

தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை அவர்களே பயமின்றி தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மீ டூ. சில நாட்களுக்கு முன்பு மீ டூவில் வரும் புகார்களை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மீ டூ குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாக்குமரி, தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘யார் மீதும் ஆதாரமில்லாமல் சகதியை வீசும் வகையில்தான் மீ டூ உள்ளது. இதனால் இவற்றின் மூலம் வரும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.’ என கூறியுள்ளார்.