Published on 12/09/2023 | Edited on 12/09/2023
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசும் போது தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றியும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.