Skip to main content

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருப்பம்... போலீசாரின் புதிய திட்டம்...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

திருச்சியில் மிகப் பிரபலமான நகைக் கடையான லலிதா ஜீவல்லரியில் துளைபோட்டு நடந்த 13 கோடி ரூபாய் நகைக் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் கொள்ளையன் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை திருச்சி டி.சி. மயில்வாகணன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் சுரேஷ் திருவண்ணாமலையிலும் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

 

custody for suresh in trichy lalithaa jewellery

 

 

இதனையடுத்து சுரேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட தனிப்படை போலீசார், அதற்காக திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர். இந்த நிலையில் லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் தற்போது காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த 7 நாட்கள் விசாரணையில் சுரேஷிடம் இருந்து காவல்துறையினருக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்