Published on 17/03/2022 | Edited on 17/03/2022
மாணவர்கள் படிக்கும்பொழுதே அவர்களின் திறனை வளர்த்து தொழிற்பயிற்சி வழங்கும் வகையில் அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கிடையாது எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் இந்த பயிற்சி அளிக்கிற திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். படிக்கும்போதே மாணவர்களுக்கு ஒரு ஆர்வத்தை உருவாக்கி அவர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் பாடத்திட்டங்கள் அமையவேண்டும். அதனால்தான் தொழில்முனைவோர்களையும், தொழிற்சாலை வைத்திருப்பவர்களையும் அழைத்துப் பேசி முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.