கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ரமேஷ். இவருக்கு லட்சுமி என்பவருடன் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இதே போல் பொன்னேரி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மனைவி காயத்ரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.
திருமூர்த்தி வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி விருத்தாசலத்தில் உள்ள தனியார் பேக்கரியில் பணி புரிந்து வருகிறார். அதே கடையில் பணிபுரிந்து வந்த ரமேஷ் என்பவருடன் கள்ள காதல் ஏற்பட்டு, பல நாட்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளக்காதலை அறிந்த பேக்கரி கடை நிர்வாகம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு இருவரையும் நீக்கி உள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ், காயத்ரி இருவரும் விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஆண், பெண் இருவர் பிணமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரனை மேற்கொண்டதில் விருத்தாசலம் - சேலம் செல்லும் ரயிலில் ரமேஷ், காயத்ரி தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் உடலின் அருகே பூச்சி மருந்து பாட்டில், இரு சக்கர வாகனம், மொபைல் போன் உள்ளிட்டவை கிடந்ததால் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது.