
கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள 'கிரிம்சன் ஆர்கானிக்' என்ற கெமிக்கல் தொழிற்சாலையின் இரண்டாவது தளத்தில் நேற்று (13/05/2021) காலை பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வலியுறுத்தி தொழிலாளர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியினர், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் சடலங்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரமும் வழங்க கோட்டாட்சியர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.