Skip to main content

'சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களை அரசு தடை செய்ய வேண்டும்'- சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மீனவர்கள் மனு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

cuddalore district fishermans district collector

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கடற்கரையோர மீனவ கிராமங்களான சாமியார்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட 32 கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஒன்று சேர்ந்து சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு சில மீனவர்கள் சுருக்குமடி வலை மூலம் மீன் பிடிப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த 33 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜனைச் சந்தித்து மனு அளித்தனர். 

 

அந்த மனுவில் தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் துன்பப்பட்டு வருகின்றோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சுருக்கு மடி வலைகளைத் தடை செய்ய வேண்டும். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்