Skip to main content

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நேமம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்கள் பல  வருடங்களுக்கும் மேலாக  தங்களது கிராமத்தை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விளை நிலங்களில் அளவீடு செய்து கற்கள் பதித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது, இவ்விளை நிலங்கள் அமைந்துள்ள பகுதியில், 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி என்றும் கூறியுள்ளனர். 

 

cuddalore district Farmers blockade officials who tried to abolish the lake occupation!

 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கற்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.  இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் இதர துறை  அதிகாரிகள் இரண்டு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏரியை தூர்வாருவதற்காக விளைநிலங்களை தோண்ட ஆரம்பித்தனர்.

 

cuddalore district Farmers blockade officials who tried to abolish the lake occupation!

 

இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன், விளை நிலங்களை விட்டு வெளியே சென்ற பின் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.



 

சார்ந்த செய்திகள்