விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் முழுவதும் பணி முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்கவரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது மிகவும் அதிகமாக உள்ளதாலும், உள்ளூர் மக்களுக்கு எந்த சலுகையும் வழங்காததால் பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க தீவிரம் காட்டப்பட்டு வருகிற
கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிதாக சுங்க கட்டணம் வசூல் மையம் திறப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு இன்று தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.