பொங்கல் விடுமுறைக்கு வெளியூரில் பணிபுரியும் இடத்திலிருந்து சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் தாங்கள் பணி புரியும் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஈரோடு சுற்று வட்டாரத்தில் விசைத்தறி கூடங்கள், பனியன் கம்பெனிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ளது. இங்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருப்பதால், நெல்லை, நாகர் கோவில், புதுக்கோட்டை ,தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஙே்ர்ந்த பொதுமக்கள் இங்கு பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர்.
இது தவிர, வெளியூரை சேர்ந்த பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட இங்கு பணியாற்றும் பொதுமக்கள் அவரவர் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அதேபோல் ஈரோட்டை சொந்தமாக கொண்டவர்கள் வெளியூரிலிருந்து ஈரோடு வந்தனர். பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததையொட்டி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், என பல்லாயிரக்கணக்கானோர் என ஈரோடு பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
குறிப்பாக திருப்பூர், கோவை, சேலம் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கோவை செல்வதற்கும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் கியூ வரிங்யைில் பஸ் ஏற அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் இன்றும் உள்ளது.