கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பிறகு நேற்று மாலை 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்தார்.
முன்னதாக, இந்த அறிவிப்புகளின் படி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என கூறப்பட்டிருந்தது. அதில் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அடங்கும். நேற்றைய (24.03.2020) தினம் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவதற்கு முன்னதாக தேவையான மதுபாட்டில்களை வாங்கிவிட வேண்டும் என டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணியை நெருங்கியதும் கூட்டத்தை கலைக்க போலீசார் எவ்வளவு முயன்றும் மதுப்பிரியர்கள் அடித்துப்பிடித்து மதுபானங்களை வாங்கியது ஒருபுறம் நகைப்பை ஏற்ப்படுத்தினாலும் மற்றொரு புறம் இவ்வளவு கூட்டம் கூடுவது இந்த சூழலில் சிறிது அஞ்சவேண்டிய ஒன்றாகவும் உள்ளது.