இன்று விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று மாவட்டத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளைக் கேட்டறிந்து நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், குற்ற வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் எனவும், குற்றங்கள் நடைபெறாமல் எவ்வாறு பணிபுரிய வேண்டும் எனவும், பாலியல் சம்மந்தமான குற்றங்களை எவ்வாறு தடுப்பது எனவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்டத்தில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த காவல் அலுவலர்களைப் பாராட்டி மேலும் சிறப்பாகப் பணிபுரிய ஊக்குவித்தார். இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என்.தேவநாதன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், தனிப்பிரிவு ஆய்வாளர், காவல் நிலைய ஆய்வாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.