Skip to main content

தொடங்கியது சி.பி.எம் 22வது மாநில மாநாடு..!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
cpm 2


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடி ஏ.வி.எம்.கனகவேல் மகாலில், செங்கொடி உயரட்டும்; தமிழகம் நிமிரட்டும் என்ற முழக்கத்துடன் சற்றுமுன் தொடங்கியது.

பிப்ரவரி 17 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் இம்மாநில மாநாட்டில் சுடர்கள் பெறுதல், பொது மாநாடு, பிரதிநிதிகள் மாநாடு, செந்தொண்டர் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

தற்பொழுது மாநாட்டுக் கொடியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் ஏற்றி வைக்க, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு துவங்கியது. இதில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் கனகராஜ் வரவேற்புரையாற்றிய பின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி வருவது குறிப்பிடதக்கது.
 

cpm 1


இது இப்படியிருக்க சக தோழமைகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் ரங்கசாமி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசவுள்ள நிலையில், பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலமுதல்வருமான பினராயி விஜயன் ஆகியோரின் பங்கேற்று உரையாற்றவுள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

சார்ந்த செய்திகள்