Skip to main content

அரசு அறிவித்த நிவாரணங்களை வழங்காமல் அலைக்கழிப்பு: மீனவர்கள் குற்றச்சாட்டு

Published on 23/07/2018 | Edited on 27/08/2018

ஓகி புயலின் போது கடலில் அடித்து செல்லப்பட்ட விசை படகுகளுக்கு 8  மாதங்கள் ஆகியும் அரசு அறிவித்த நிவாரணங்கள் வழங்காமல் அலைக்கழிப்பதாக மீனவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

கடந்த நவம்பா் 29-ம் தேதி ஏற்பட்ட ஒகி புயலின் ருத்ர தாண்டவத்தால் குமாி மாவட்டம் சின்னாபின்னமாக சீா்குலைந்தது. இதில் கடற்கரை கிராமங்கள் பொிய அளவில் உயிா்சேதமும் பொருள்சேதமும் ஏற்பட்டன. இதில் இறந்த மீனவா்கள் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் நிவாரணம் அரசு வழங்கியது.

 

Fishermen complain


அதே போல் கடலில் அடித்து செல்லப்பட்ட விசைபடகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி தூத்தூா் மீனவா் கிராமத்துக்கு வந்த போது அறிவித்தாா். அது வெறும் அறிவிப்போடு தான் இருக்கிறதே தவிர மேற்க்கொண்டு எந்த நடவடிக்கையும் அரசும் அதிகாாிகளும் எடுக்காமல் மீனவா்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டுகின்றனா்.

 

 

இது குறித்து நம்மிடம் பேசிய தூத்தூாா் விசைபடகு உாிமையாளா்கள் ஜாண் பிாிட்டோ, ஏசுதாசன், டைட்டஸ்... ஓகி புயலின் போது 21 விசைபடகுகள் கடலில் மூழ்கின. இதில் ஓவ்வொரு விசை படகும் 75 லட்சம் ரூபாய் கொண்டதாகும். இதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் கூறினாா். இதனையடுத்து அதிகாாிகள் கணக்கெடுப்பு நடத்தி சம்மந்தபட்டவா்களிடம் இருந்து ஆவணங்களும் வாங்கினாா்கள். ஆனால் இதுவரையிலும் நிவாரணம் வழங்கபடவில்லை. இதனால் அந்த விசைப்படகு உாிமையாளா்கள் எல்லோரும்  கஷ்டத்தில் உள்ளனா். 

விசைபடகு இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் உள்ளோம். மேலும் நிவாரணத்துக்காக சென்னையிலும் குமாி மாவட்டத்திலும்  மீன் வளத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். அதிகாாிகளும் எங்களை அலைக்கழிக்கிறாா்கள் என்றனா்.
 

 



 

சார்ந்த செய்திகள்