Skip to main content

பாஜக,அதிமுகவை வீட்டிற்கு அனுப்ப நாகையில் சங்கமிப்போம்- சிபிஎம் அழைப்பு

Published on 02/03/2019 | Edited on 02/03/2019


மக்கள் விரோத அரசுகளான பாஜக, அதிமுகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்துவிட்டு வீட்டிற்கு அனுப்ப நாகையில் சங்கமிப்போம் என டெல்டா மாவட்ட மக்களுக்கு அழைப்புக்கொடுத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

 

முன்னாள் கீழ்வேளூர் எம்.எல்.ஏ மாலி தனது அறிக்கையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து தன்னுடைய வாக்குறுதிகளை ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிற பிஜேபி மோடி அரசாங்கம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

 

ss

 

டெல்லியில் மத்திய அரசாங்கங்கத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் உருவாக்கப்படவேண்டும். டெல்லி நாடாளுமன்றத்தில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதேபோல தமிழகத்தில் ஊழல் நிறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தோடு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பிரச்சாரத்தை துவங்க இருக்கிறது.

 

அந்த வகையில் அதை ஒட்டி வருகின்ற மார்ச் 10ஆம் தேதி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அந்தபொதுக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்க  இருக்கிறார்கள். ஆகவே அனைத்து பகுதிமக்களும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்குபெற்று பிருந்தா காரத் அவர்களுடைய பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் தமிழர்களுடைய நாகை மாவட்ட குழு சார்பில் அன்புடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்." என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்