திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் மாட்டு தறியில் கட்டப்பட்டிருந்த சினைபசு மாடு காணவில்லை என்று மாட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தேட ஆரம்பித்துள்ளார். நடு இரவு வரை தேடிய நிலையில், மாடு கிடைக்காமல் மாட்டை யாரும் திருடிவிட்டார்களா என்று சந்தேகத்தில் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார்.
ஊர் முழுவதும் விசாரித்து எந்த தகவலும் கிடைக்காததால் வீடு திரும்பிய பாலகிருஷ்ணன் மாட்டு தறியில் உள்ள மற்ற மாடுகளை பார்க்க சென்றபோது கிணற்றுக்குள் மாட்டு கத்தும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் 6 பேர் கொண்ட குழு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மாட்டை கயிற்றால் கட்டி டிராக்டர் மூலம் மேலே இழுத்து காப்பாற்றியுள்ளனர் .
கிணறு 120 அடி ஆழம் உள்ள நிலையில், 20 அடிவரை தண்ணீர் இருந்ததால் மாடு பள்ளத்தில் விழுந்தும் இறந்து போகாமல் உள்ளது. சினை பசு என்பதால் மாடு தண்ணீரில் பத்திரமாக இருந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கிணறு வறண்டு போயிருந்தால் மாடு நிச்சயம் இறந்து போயிருக்கும் என்று தெரிவித்தனர்.