மாணவிகளிடம் தவறாக பேசி தவறானப்பாதைக்கு அழைத்துச்செல்ல முயன்றதாக கைதுசெய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுப்பது குழப்பத்தை தருகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தவந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாணவர் பிரச்சனைகளுக்கும் பேராசிரியர் போன்ற கல்வியாளர்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் இடத்தில் துணைவேந்தர் இருக்க திடீரென ஆளுநர் நடடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது எதோ ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது. மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் எனவும் கூறியுள்ளார்.