சென்னை தீவுத்திடல் அருகே உள்ள கல்லறைநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் பணியை டிசம்பர் 29ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆரம்பித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு குடியிருப்புகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கு செவிசாய்க்காத அரசு மேலும் இப்பகுதி மக்களை அகற்றி வரும் நிலையில் அப்பகுதி மக்களை சந்தித்து விசாரித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,
குடிசைகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாங்கள் பள்ளி மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு உள்ள காரணத்தால் காலதாமதமாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அதையும் தாண்டி மேலும் அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சாலைமறியல் என அறிவித்தோம். அதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் முடியும் வரை வீடுகளை இடிக்க மாட்டோம் என துணை முதல்வர் கூறியதையடுத்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளோம்.
அதேபோல காலி செய்யப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு துரைப்பாக்கத்தில் வீடு கொடுக்கப்படுள்ளது. அங்கு மின் வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. அதனை சரிசெய்து தரவேண்டும் என்றார்.