Published on 26/08/2020 | Edited on 26/08/2020

தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரியர் மற்றும் கல்லூரி இறுதிப்பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப் பாடங்களுகளின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யூ.சி.ஜி. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு வழிகாட்டுதலின்படி, தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.