Skip to main content

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு! ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!!!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கைகளை  தீவிரப்படுத்தி வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


 

 

  corona virus impact - lockdown issue - TamilNadu CM Palanisamy Request to modi

 

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911ல் இருந்து 968 ஆக உயர்ந்துள்ளது என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஈரோட்டில் முதியவர் கரோனாவால் இன்று உயிரிழந்ததையடுத்து  தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்றார். 
 

மேலும் தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று தமிழகம் பின்பற்றும்  என்றும், தமிழகத்திற்கு வர வேண்டிய 'ரேபிட் கிட்' கருவிகள் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது, அடுத்து விரைவில் தமிழகத்திற்கு ரேபிட் கிட்' கருவிகள் வந்தடையும் என்றும் அவர்  கூறினார். 
 

பிரதமர் தலைமையில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் ஆகியவை நிறைவடைந்துள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்