கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று கோவை உட்கடம் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கேரளாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கோவை வழியாக தமிழகம் வந்துவிடுமோ என்கிற எச்சரிக்கையோடும், பாதுகாப்பு கருதியுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். பேருந்துகள் கழுவப் படுதலைக் காணும் கோவை மக்கள் பெரும் அச்சம் படிந்த முகங்களோடு அதைப் பார்த்து செல்கின்றனர்.