கரோனா வைரஸ் தொற்று ஈரோட்டில் தாய்லாந்து நபர்கள் இரண்டு பேருக்கு உறுதியானது. இதையடுத்து அந்த தாய்லாந்து நபர்கள் சென்று வந்த இடங்கள் அனைத்திலும் இன்று காலை முதல் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அவர்கள் நடத்திய ஆய்வில் கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை மசூதியில் 169 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் தொழுகை ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கரோனா தொற்று உள்ள தாய்லாந்தை சேர்ந்த இருவரும் அதில் பங்கேற்றுள்ளனர் என்பதும், தொழுகையில் ஈடுபட்ட 697 பேரில் 13 பேருக்கு காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் காய்ச்சல் உள்ள 13 பேருக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து கரோனா தொற்று உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இன்று மாலை வைரஸ் விழிப்புணர்வு முத்திரை குத்தப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களின் வீட்டுகள் முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.