
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 723 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று பதிவாகி உள்ளது.
இந்நிலையில், இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 7,22,011 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 3,924ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,87,388 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,091 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 70,767 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 99,56,210 பரிசோதனைகள் மொத்தமாக தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது.