Skip to main content

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு நன்றி, இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு!!!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

corona poster issue

 

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்து மக்கள் கட்சியினர் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கும் விவகாரம் விவாதத்தையும், பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


கரோனா நோயால் ஒட்டுமொத்த உலகமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் உருகுலைந்து கிடக்கிறது. இந்திய அரசு கரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நோய்தொற்றில் இருந்து மீளும்வகையில் பல்வேறு செயல்களை செயல்களை செய்துவருகிறது. அதை தமிழக அரசும் வழிமொழிந்து செயல்படுத்தி வருகிறது. அதற்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டி சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். ஆனால் இந்து மக்கள் கட்சியினர் சற்று வித்தியாசமாக கரோனா வைரஸ்க்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறுகையில், "கரோனா நோய்தொற்று ஏற்பட்ட நாள்முதல் இந்த நோயை கட்டுப்படுத்த மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எதிர்ப்பு சக்தி மட்டுமே பிரதானமாக கருதப்பட்டது. அதற்காக முதாதையர்கள் பின்பற்றி வந்த தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தது . 

குறிப்பாக கை கொடுப்பது, கட்டி அணைப்பது புறந்தள்ளப்பட்டு, வணக்கம் வைப்பது சரியான நடவடிக்கை என அரசு சார்பில் விளம்பரங்களில் ஒளிபரப்பப்பட்டது.

 

 


அதேபோல் மஞ்சள் தேய்த்து குளித்தல், பல்வேறு கிராம மற்றும் நகர பகுதிகளில் கிருமிநாசினி மருந்தாக வேப்பிலை மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரை பல்வேறு இளைஞர்கள் கிராமம் முழுவதும் தெளித்தது. அனைவரும்  வேப்பிலையை வீட்டு முன்பாக வைத்தது. பல்வேறு நகரப்பகுதிகளில் வேப்பிலை விற்பனைக்கு வந்தது. வேப்பிலை உள்ளிட்ட மூலிகை பொருட்களின் மருத்துவ குணத்தை மக்களுக்கு உணர்த்தியது. ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன கருத்தான வெளியில் சென்று வந்தால் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் வந்தது. 

விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நமக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் அடுத்தவருக்கு உதவிட வேண்டுமென்கிற மனப்பான்மை ஏற்படுத்தியது. குறிப்பாக கபசுரக் குடிநீர் என்கிற எதிர்ப்பு சக்தி உள்ள சித்த மருத்துவத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நம் பண்டைய கால விளையாட்டுகள் நம் வாழ்வில் ஏற்படும் அர்த்தத்தை குறிக்கின்ற வகையில் இருந்து வந்தது குறிப்பாக தாயம், பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், பட்டம் விடுதல் போன்ற நம் வாழ்வியலை உணர்த்தும் வகையில் உள்ள விளையாட்டுகள் மீண்டும் நமது இல்லத்திற்கு வந்தடைந்தது. இந்த கரோனா நோயுற்ற காலத்தில் உலகம் முழுவதும் நமது தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நடைமுறைப்படுத்தியது. பல்வேறு விஷயங்கள் இந்த கரோனா தொற்று காலகட்டத்தில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலை காலகட்டத்தில் அனுபவித்திருந்தாலும் வருங்காலத்தில் நாம் சுத்தமாக இருப்பதும், மேலைநாட்டு கலாச்சாரத்தை புறந்தள்ளி விட்டு நமது தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தாலே நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்." என்றவர், இறுதியாக, இது வெறும்  சுவரொட்டி தானே தவிர வேற எந்த உள்நோக்கமும் இல்லை," என முடித்துக்கொண்டார்.
 

nakkheeran app



இந்த போஸ்டர் விவகாரம் கும்பகோணம் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது, நாடே அல்லோல பட்டுக்கிடக்கும் சூழலில் இதுபோன்ற கேலி கிண்டல் தேவையா என பலரும் பேசுகின்றனர். 

கும்பகோணம் ஆன்மீக பிரமுகரும், சமுக ஆர்வளருமான சுவாமிஜி ஒருவரிடம் இது குறித்து கேட்டோம்," அவர்கள் கூறியதில் தவறில்லை, ஆனால் சொன்ன சமயம் தவறு. இன்று கரோனா எனும் கொடிய வைரஸால் ஒட்டுமொத்த நாடுகளும் அடுத்தடுத்து என்ன ஆகுமோ, பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்கிற கவலையில் மூழ்கியுள்ளனர், நடுதர மக்கள் வேலையின்றி, வருமானத்தை இழந்து இனிவரும் காலத்தில் எப்படி குடும்பத்தை நடத்துவது என்கிற மனவேதனையில் உறைந்து கிடக்கின்றனர். அடிதட்டு மக்களான அன்றாடம் காய்ச்சிகள், தினக்கூலிகளின் குடும்பங்களில் வேலையின்றி பட்டினிச்சாவுகள் துவங்கிவிட்டன. இப்படிபட்ட சூழலில் இப்படியோரு போஸ்டர் அடிக்க முடிவு செய்து அதற்கு செலவு செய்திருப்பதற்கு பதிலாக அந்த பணத்தில் நாலு குடும்பத்திற்கு உதவியிருக்கலாம்." என்கிறார் தனக்கே உரிய பாணியில்.

 

 

சார்ந்த செய்திகள்