Published on 07/08/2020 | Edited on 07/08/2020

உலக மக்கள் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய வேண்டி நாச்சாரம்மன் கோவிலில் சாமி பாதத்தில் வேண்டுதல் மனுவை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட பெரிய வெண்மணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள நாச்சாரம்மன் சாமி பாதத்தில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய வேண்டி கோரிக்கை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு பூ அலங்காரம் செய்து, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சூடம், சாம்பிராணி, பத்தி ஏற்றி பொங்கல் படையலிட்டு பூசை நடைபெற்றது. அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற பூசையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் சாமிக்கு படையலிட்டு பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.